TNPSC Thervupettagam

தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாடு

December 30 , 2025 15 hrs 0 min 29 0
  • தலைமைச் செயலாளர்களின் ஐந்தாவது தேசிய மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் தலைமை தாங்கினார்.
  • தேசிய மேம்பாட்டு முன்னுரிமைகள் குறித்த கட்டமைக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் மத்திய-மாநில கூட்டாண்மையை நன்கு வலுப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • "Human Capital for Viksit Bharat" என்பது இந்த மாநாட்டின் கருத்துரு ஆகும்.
  • இந்த மாநாடு ஆனது, ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிப்படிப்பு, திறன் மேம்பாடு, உயர்கல்வி, விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • மாநிலங்களில் கட்டுப்பாடு நீக்கம், நிர்வாகத்தில் தொழில்நுட்பம், சீர்மிகு விநியோகத் தொடர்களுக்கான AgriStack, சுற்றுலா, ஆத்மநிர்பர் பாரத் (தற்சார்புடைய இந்தியா) மற்றும் சுதேசி, மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்குப் பிந்தைய எதிர்காலத்திற்கான உத்திகள் குறித்து ஆறு சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்