April 24 , 2022
1171 days
627
- மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராகப் பிரபல இயற்பியலாளர் அஜய் குமார் சூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
- இவர் மூன்று வருட பணிக் காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் கிராபைன் பற்றிய இவரது பணிக்காக பிரபலமாக அறியப்படுகிறார்.
- மேலும், இவர்பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் உள்ளார்.
- இந்தப் பணி நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
- இவர் புகழ்பெற்ற உயிரியலாளர் K.விஜயராகவனை அடுத்து இந்தப் பதவியை ஏற்க உள்ளார்.

Post Views:
627