TNPSC Thervupettagam
April 17 , 2018 3002 days 1341 0
  • தகவல் தொழிற்நுட்பத் தொழிற்துறை அமைப்பான (IT industry body) நாஸ்காம் (Nasscom) விப்ரோ நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரி (chief strategy officer) மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினரான ரிஷத் பிரேம்ஜியை  2018 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான  கால கட்டத்திற்கு தன்னுடைய அமைப்பின் தலைவராக நியமித்துள்ளது.
  • தற்போது நாஸ்காம் அமைப்பின் தலைவராக உள்ள குவத்ரோ குளோபல் சர்வீஸ் நிறுவனத்தின் (Quattro Global Services) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவரான ராமன் ராயை  அடுத்து ரிஷத் பிரேம்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் WNS குரூப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கேசவ் முருகேஷ் அவர்களை துணைத்தலைவராகவும் நாஸ்காம் அமைப்பு நியமித்துள்ளது.
  • 2017 முதல் 2018 ஆம் ஆண்டு காலத்திற்கு நாஸ்காம் அமைப்பின் துணைத் தலைவராகவும், நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் ரிஷத் பிரேம்ஜி பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்