TNPSC Thervupettagam

த.வெ.க அமைச்சரவையில் தலைமுறை மாற்றம்

May 23 , 2026 2 days 91 0
  • சி. ஜோசப் விஜய் தலைமையிலான 2026 ஆம் ஆண்டிற்கான அமைச்சரவையின் சராசரி வயது 44.6 ஆண்டுகள் ஆகும்.
  • ஜெ. ஜெயலலிதா தலைமையிலான 2011 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் சராசரி வயது 51.8 ஆண்டுகளாகவும், 2021 திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் 61.3 ஆண்டுகளாகவும் இருந்தது.
  • தமிழக வெற்றிக் கழக அரசின் 33 அமைச்சர்களில், 22 அமைச்சர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
  • இந்த அமைச்சரவையில் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்கள், இளம் தலைவர்கள், தொழில்முறையாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், திரைப்படப் பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அடிமட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியைச் சேர்ந்த எஸ். கமலி, தனது 28வது வயதில் அமைச்சரவையின் மிக இளைய அமைச்சரானார்.
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியைச் சேர்ந்த எஸ். கீர்த்தனா, தனது 29வது வயதில் இளைய அமைச்சர்களில் ஒருவரானார்.
  • இந்த அமைச்சரவையில் பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) சமூகத்தைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் உள்ளனர் என்ற நிலையில் இது தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் அதிகபட்ச பட்டியலிடப்பட்ட சாதியினர் சமூக பிரதிநிதித்துவமாகும்.
  • முன்னதாக, மாற்றியமைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் பட்டியலிடப் பட்ட சாதியினர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் இருந்தனர்.
  • தமிழ்நாடு அமைச்சரவைகளில் பட்டியலிடப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவம் மெட்ராஸ் மாகாண காலத்திலிருந்தே தொடங்குகிறது.
  • இந்திய அரசுச் சட்டம் 1935-இன் படி, 1937 ஆம் ஆண்டில் கே. வி. ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் எம். சி. ராஜா சேர்க்கப்பட்டார்.
  • மெட்ராஸ் மாகாண அரசாங்கத்தில் எம். சி. ராஜாவுக்கு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப் பட்டது.
  • 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான அமைச்சரவையில் வி. ஐ. முனுசாமி பிள்ளை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரானார்.
  • 1957 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, கே. காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்த பி. கக்கன், பொதுப்பணித்துறையை கையாண்டார்.
  • 1962 ஆம் ஆண்டில், பி. கக்கனுக்கு வேளாண்மைத் துறை வழங்கப்பட்டது.
  • 1963 ஆம் ஆண்டில், எம். பக்தவத்சலம் முதலமைச்சரான போது, உள்துறை பி. கக்கனுக்கு ஒதுக்கப்பட்டது.
  • 1967 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அடுத்தடுத்து அமைந்த அமைச்சரவைகளில் சத்யவாணி முத்து சேர்க்கப்பட்டார்.
  • எதிர்காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசில் இணைந்தால், அமைச்சரவையில் தற்போதுள்ள பட்டியலிடப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • விசிக.வைச் சேர்ந்த வன்னி அரசு இந்த அமைச்சரவையில் இணைந்ததன் மூலம், மாநில அமைச்சரவையில் பட்டியல் சாதி உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாடு அமைச்சரவையில் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த எட்டு பேர் ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • விசிக-வின் வன்னி அரசு மற்றும் ஐ.யு.எம்.எல்-இன் ஷாஜஹான் ஆகியோர் இணைந்ததன் மூலம், தமிழ்நாட்டில் விஜய்யின் அமைச்சரவையில் தற்போது 35 அமைச்சர்கள் உள்ளனர்.
  • திரு. ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், திரு. வன்னி அரசு ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் துறையைக் கையாள்வார், மேலும் அவர் சமூக நீதித்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
  • விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் கட்சிகள் அரசாங்கத்தில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இணைந்ததன் மூலம், 1967-க்குப் பிறகு 59 ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி அரசாங்கத்தில் இணைந்துள்ளது.
  • இது 1952-க்குப் பிறகு அமைந்த மாநிலத்தின் முதல் கூட்டணி அரசாங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்