தாக்குதல்களிலிருந்து கல்வி சார் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 09
September 11 , 2023 691 days 276 0
கல்வி சார் கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அனைத்துக் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்குமான அழைப்பினை விடுப்பதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த நாள் ஆனது 2020 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
உலகளவில் 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கல்வி சார் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் அல்லது கல்வி சார் கட்டமைப்பு வசதிகளை இராணுவங்கள் பயன்படுத்துதல் சார்ந்த 14,500க்கும் மேற்பட்டச் சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இத்தகைய தாக்குதல்களில் 28,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் காயமடைந்தனர், கொல்லப்பட்டனர் அல்லது பாதிக்கப்பட்டுள்ளனர்.