April 4 , 2021
1502 days
919
- திரு. ரஜினிகாந்த் இந்த ஆண்டிற்கான மதிப்பு மிக்க தாதாசாகிப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளார்.
- ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டில் வெளியான K. பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
- அவர் தமிழ் சினிமாவில் 45 வருடத்திற்கும் மேலாக திரைப்பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
விருது பற்றிய தகவல்கள்
- இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருது தாதாசாகிப் பால்கே விருதாகும்.
- இவ்விருது திரைப்பட விழா இயக்குநரகத்தால் வழங்கப் படுகிறது.
- இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பணியாற்றிய நபர்களுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
- துண்டிராஜ் கோவிந்த் பால்கே அவர்களின் நினைவாக இவ்விருதிற்கு இப்பெயர் சூட்டப் பட்டது.
- பால்கே இந்திய திரைப்படத் துறையின் தந்தையாகப் போற்றப்படுகிறார்.
- இவ்விருது 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
- இவ்விருதைப் பெறுபவர் ஒரு சுவர்ண கமலப் பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை ஆகியவற்றைப் பெறுவார்.

Post Views:
919