தாதாசாகேப் பால்கே விருது 2023
September 23 , 2025
2 days
55
- மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
- 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
- தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் மிக உயர்ந்த கௌரவமாகும்.
- மோகன்லால் மலையாளத் திரைத்துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான பங்களிப்பினைக் கொண்ட ஒரு முன்னணி நடிகர் ஆவார்.
- அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார்.
- அவர் தனது வாழ்க்கையில் ஐந்து தேசியத் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
- மோகன்லாலுக்கு 2001 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
- 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியது.
- 2009 ஆம் ஆண்டில், அவர் இந்தியப் பிராந்திய இராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டார்.
Post Views:
55