TNPSC Thervupettagam

தானியங்கி அடையாளம் மற்றும் தரவு சேகரிப்பு - இந்திய ரயில்வே

February 1 , 2020 1929 days 844 0
  • இந்திய ரயில்வேவானது பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ரேடியோ - அதிர்வெண் அடையாள (Radio-frequency identification - RFID) திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
  • இது ரயில் பெட்டிகளின் தானியங்கி அடையாளம் மற்றும் தரவு சேகரிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய ரயில்வே துறையில் இந்த திட்டத்தைச் செயல்படுததுவதற்காக,
    • ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS, இந்திய ரயில்வேயின் தகவல் தொழில்நுட்ப பிரிவு),
    • ஜிஎஸ் 1 இந்தியா மற்றும்
    • 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முன்முயற்சியுடன் இந்தியத் தொழில் துறையும் ஒன்று சேர்ந்துள்ளது.
  • ரயில் இருப்பு உணர்வி (Train Presence Detectors - TPDs), ரயில் தண்டவாள நிலை கண்காணிப்பு உபகரணங்கள் போன்ற பல்வேறு உபகரணங்களுடன் RFID உபகரணங்களை ஒருங்கிணைப்பதும் ஒரு முழுமையான தீர்வாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்