தானே சிற்றோடை பிளமிங்கோ சரணாலயம் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம்
May 11 , 2021 1685 days 779 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது சமீபத்தில் தானே சிற்றோடை பிளமிங்கோ சரணாலயத்தைச் சுற்றியமைந்த 48.32 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்பினை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக (Eco Sensitive Zone – ESZ) அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களானது பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஒரு இடையக மண்டலமாக (Buffer Zone) செயல்படும்.
இவை தேசியப் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 10 கி.மீ. அளவிலான சுற்றளவில் அமைந்திருக்கும் பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கப்படாத பகுதிகளாகும்.
தேசியப் பூங்கா (அ) வனவிலங்குச் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப் படும் மேம்பாட்டுத் திட்டங்களால் ஏற்படும் நெருக்கடியை இவை குறைக்கும்.