TNPSC Thervupettagam

தாமஸ் மன்றோவின் இருநூறாவது ஆண்டு விழா 2026

February 24 , 2026 2 days 65 0
  • நீலகிரி ஆவண மையம் (NDC), ஆங்கிலேய ஆளுநர் சர் தாமஸ் மன்றோவின் 200வது நினைவு தினத்தைக் கொண்டாடுமாறு தமிழக அரசைக் கோரியுள்ளது.
  • 1820 முதல் 1827 வரை ஆளுநராகப் பணியாற்றிய மன்றோ தமிழ்நாட்டில் ரயத்வாரி நில நிர்வாக முறையை அறிமுகப்படுத்தினார்.
  • மாநிலத்தில் நவீன நிர்வாகம், காவல்துறை மற்றும் கல்விக்கான அடித்தளங்களை அமைத்த அவர் இந்தியாவிற்கான ஒரு கூட்டாட்சி அமைப்பை ஆதரித்தார்.
  • நீலகிரியை ஒரு மலை வாழிடமாக மேம்படுத்துவதில் ஜான் சல்லிவனின் பணிகளை மறுபரிசீலனை செய்ய மன்றோ செப்டம்பர் 1826 இல் அங்கு பயணம் செய்தார்.
  • அவர் நீலகிரியை ஒரு சுகாதாரப் புகலிடமாக மாற்ற மே 28, 1827 அன்று பரிந்துரை செய்தார் என்பதோடு அந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளான ஜூலை 7, 1827 அன்று காலராவால் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்