தாமிரபரணி நதியில் நீர்நாய்களின் இயற்கையான வாழ்விடம் அழிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி நதியானது, தாம்ரபரணி அல்லது பொருநை என்றும் அழைக்கப் படுகிறது என்பதோடு இது முற்றிலும் தமிழ்நாட்டிற்குள் ஓடும் ஒரு அரிய வற்றாத நதி ஆகும்.
இது மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் உள்ள அகத்தியர்கூடம் சிகரத்தில் உற்பத்தியாகி, வங்காள விரிகுடாவில் உள்ள மன்னார் வளைகுடாவில் கலக்கிறது.
இந்த நதி சுமார் 128 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்கிறது.
கடனாநதி, மணிமுத்தாறு மற்றும் பச்சையாறு ஆகியவை இதன் முக்கிய துணை நதிகள் ஆகும் என்ற நிலையில் மேலும் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் கடனாநதி அணைகள் இதன் முக்கிய அணைகளாகும்.
சுமார் 669 மீன் இனங்களுடன் வளமான பல்லுயிர்த் தன்மையைக் கொண்ட இந்த நதியானது, யூரேசியன் நீர்நாய், மென்மையான-உரோமன் உடைய நீர்நாய் மற்றும் ஆசிய சிறிய-நகம் கொண்ட நீர்நாய் ஆகிய மூன்று நீர்நாய் இனங்களும் வாழும் இந்தியாவின் சில நதிகளில் ஒன்றாகும்.