பீகார் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆறு ஆய்வில், 40 தாய்மார்களிடமிருந்து சேகரிக்கப் பட்ட அனைத்துத் தாய்ப்பால் மாதிரிகளிலும் யுரேனியம் (U-238) இருப்பது கண்டறியப்பட்டது.
இது அதிகபட்சமாக கதிஹாரில் பதிவாகியுள்ளதுடன், யுரேனியக் கலப்பு அளவுகள் லிட்டருக்கு 0 முதல் 5.25 மைக்ரோகிராம் (µg/L) வரை இங்கு இருந்தன.
மாசுபாட்டின் அளவில் மாவட்டங்களின் வரிசை கதிஹார், சமஸ்திபூர், நலந்தா, ககாரியா, பெகுசராய் மற்றும் போஜ்பூர் ஆகும்.
சுமார் 70% குழந்தைகளுக்கு 1க்கு மேல் ஆபத்து அளவு (HQ) இருப்பதாக ஆய்வு கூறுகிறது என்பதோடுஇது புற்றுநோய் உருவாக்காத பாதிப்பு ஆபத்தைக் குறிக்கிறது.
இந்த ஆய்வு அதன் கண்டுபிடிப்புகளை உலக சுகாதார அமைப்பின் (WHO) குடிநீருக்கான 30 µg/L என்ற வரம்புடன் (கண்டறியப்பட்ட அளவை விட அதிகமான வரம்பு) ஒப்பிட்டது.
இந்த ஆய்வு யுரேனியம் இருப்பினை ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் மாசுபட்ட நிலத்தடி நீர் மற்றும் உள்ளூர் உணவுச் சங்கிலியுடன் தொடர்பு படுத்தியது.