TNPSC Thervupettagam

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்

August 30 , 2026 14 days 118 0
  • அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம், 22 காரட் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.
  • முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
  • அரசு நிறுவனங்களில் பிரசவிக்கும் குழந்தைகள் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர், மேலும் இத்திட்டம் பிறப்பு வரிசையைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிறந்த குழந்தைகளையும் உள்ளடக்கியது.
  • தகுதியுடையவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை ஒருங்கிணைந்தக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (PICME) திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார (RCH) அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
  • இத்திட்டம் ஆண்டுதோறும் சுமார் 4,41,667 அரசு மருத்துவமனை பிரசவங்களை உள்ளடக்கும், இதற்காக ஆண்டுக்கு தோராயமாக ரூபாய் 755.83 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) மோதிரங்களைக் கொள்முதல் செய்யும், அவை மையம் மற்றும் ஆரக் கட்டமைப்பின் (hub-and-spoke model) கீழ் நியமிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மூலம் விநியோகிக்கப்படும்.
  • இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 22 முதல் முன் தேதியிட்டுச் செயல்படுத்தப்படும், மேலும் அந்தத் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளும் தகுதி உடையவர்கள் ஆவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்