தாய்வான் எனும் பெயரைப் பயன்படுத்துதல்
July 25 , 2021
1463 days
619
- தாய்வான் அரசானது ‘தாய்வான்’ எனும் பெயரில் ஐரோப்பாவில் தனது முதல் அலுவலகத்தை பால்டிக் நாடான லித்துவேனியாவில் அமைக்க உள்ளது.
- இந்த முடிவிற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்திருக்கும் அதே சமயத்தில் சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
- அந்தக் கண்டத்திலுள்ள தாய்வானின் இதர பிற அரசு முறைமை அலுவலங்கள் ‘தைய்பே’ என்றே பெயரிடப்பட்டுள்ளன.
- ‘தாய்வான்’ என்பது கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும்.
- இதன் தலைநகர் ‘தைய்பே’ ஆகும்.
- மேலும் லித்துவேனியாவிற்கு தனது ஒற்றைச் சீனக் கொள்கையைப் பின்பற்றுமாறு சீனா வலியுறுத்தியுள்ளது.
- தாய்வான் நாட்டினை தனது ஒற்றைச் சீனக் கொள்கையின் கீழான ஒரு மாகாணமாக சீனா கோருகிறது.
- ஆனால் தைவான் சீனக் குடியரசு என்று அறியப்படுகிறது.
Post Views:
619