மும்பையிலுள்ள தாராவி எனும் ஒரு குடிசைப் பகுதியில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாளொன்றிற்கு 99 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகி இருந்தன.
ஆனால் கடந்த சில நாட்களாக தொற்றுகளின் எண்ணிக்கையானது படிப்படியாக குறைந்து வருகிறது.
தாராவி முன்மாதிரியின் கோவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பூசி இயக்கமானது அந்த குடிசைப் பகுதியில் கோவிட் தொற்றின் இரண்டாம் அலையினைத் தடுப்பதில் உதவியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாராவி முன்மாதிரியில் தடமறிதல், கண்காணித்தல், சோதனை செய்தல் மற்றும் சிகிச்சையளித்தல் (Tracing, Tracking, Testing and Treating – 4T) போன்றவை அடங்கும்.
கோவிட்-19 தொற்றின் முதல் அலையின் போதே இந்த முன்மாதிரியானது உலக சுகாதார அமைப்பினால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த மாதிரியின் கீழ் வீட்டுக்கு வீடு சென்று அறிகுறிகளைக் கண்டறிதல், தீவிர சோதனை மற்றும் வழக்கமான உடல் ஆய்வு போன்றவை மேற்கொள்ளப்பட்டன.