கடலோரப் பகுதிகளைப் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தார் பந்துகள் மேலாண்மை விதிகள் (வரைவு), 2026-ஐ வெளியிட்டுள்ளது.
தார் பந்துகள் என்பது கடலில் மிதக்கும் அல்லது கடற்கரைகளில் கரை ஒதுங்கும் சிறிய, ஒட்டும் தன்மையுடைய எண்ணெய் கட்டிகளாகும்.
கடலில் சிந்தப்பட்ட கச்சா எண்ணெய் ஆவியாதல், நீருடன் கலத்தல் மற்றும் கடினமாதல் போன்ற இயற்கை சிதைவு செயல்முறைகளுக்கு உள்ளாகும்போது இவை உருவாகின்றன.
தார் பந்துகளானது ஹைட்ரோகார்பன்கள், அஸ்பால்டீன்கள் மற்றும் மணல், நுண் நெகிழிகள் போன்ற கசடுகளைக் கொண்டுள்ளன.
இவை மீன்கள், பறவைகள் மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, பவளப் பாறைகள் மற்றும் கடல் புல்வெளிகளையும் சேதப் படுத்தும்.