தாவர அடிப்படையிலான உலகின் முதல் திறன்மிகு காற்று சுத்திகரிப்பான் – “Ubreathe Life”
September 3 , 2021 1572 days 753 0
இந்த தயாரிப்பானது ரூபார் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தொடக்க நிறுவனமாக Urban Air Laboratory என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த தயாரிப்பானது சுவாசத்தினைத் தூய்மையானதாக மாற்றக் கூடிய உலகின் முதல் அதிநவீன திறன்மிகு உயிரி வடிகலன் என்று கூறப்படுகிறது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமானது ‘Urban Munnar Effect’ என்றும், நிலுவையிலுள்ள காப்புரிமை “Breathing Roots” என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிறுவனமானது அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் இயக்கப் படும் பிரத்தியேக iHub – AWaDH என்ற மையம் (வேளாண் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு மையம்) ஆகும்.