TNPSC Thervupettagam

தாவர மரபணு காப்பாளர் விருதுகள் – PPV மற்றும் FRA

November 16 , 2025 11 days 36 0
  • தாவர மரபணு காப்பாளர் விருதுகள் புது டெல்லியில் வழங்கப்பட்டன.
  • இந்த நிகழ்வு ஆனது 2001 ஆம் ஆண்டு தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் வெள்ளி விழாவையும், ஆணையத்தின் 21வது ஸ்தாபன தினத்தையும் குறிக்கிறது.
  • இந்தியா முழுவதும் பாரம்பரிய மற்றும் பூர்வீக விதை வகைகளைப் பாதுகாக்கச் செய்வதற்காக விவசாயிகள் மற்றும் சமூகக் குழுக்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப் பட்டன.
  • விருது பெற்றவர்களில் தெலுங்கானாவின் சமூக விதை வங்கி, புர்பா பர்தாமனின் (மேற்கு வங்காளம்) சிக்சா நிகேதன், மிதிலாஞ்சல் மக்கானா உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அசாமின் CRS-நா திஹிங் தெங்கா உனியன் குழு ஆகியவை அடங்கும்.
  • PPV&FRA தாவர வளர்ப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமைகளை வழங்குகிறது மற்றும் விதைகளைச் சேமிக்க, பயன்படுத்த மற்றும் பரிமாறிக் கொள்வதற்கான விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.
  • இந்த ஆணையம் தேசியத் தாவர வகைகளின் பதிவேட்டை (NRPV) பராமரிக்கிறது, என்பதோடு மேலும் ஆராய்ச்சி, பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த மற்றும் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கிறது.
  • விதை வளங்காப்பு மற்றும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் பல்லுயிர்ப் பெருக்க முன்னெடுப்புகளை ஆதரிக்க சுமார் 15 லட்சம் ரூபாய் வரையில் நிதி ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்