September 14 , 2026
15 hrs 0 min
16
- 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை இந்த நாள் நினைவு கூருகிறது.
- நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமி விவேகானந்தர், 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
- அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடர் ஆவார். மேலும் வேதாந்தம் மற்றும் யோகாவின் முன்னணி நிபுணராக அவர் விளங்கினார்.
- 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி சிகாகோவில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் இந்து மதத்தின் பிரதிநிதியாக அவர் உரையாற்றினார்.
- "அமெரிக்க சகோதர சகோதரிகளே" என்ற அவரது தொடக்க வார்த்தைகள் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க சிகாகோ உரையுடன் இணைந்தது.
- மத சகிப்புத்தன்மை, உலகளாவிய ஏற்றுக்கொள்ளல், நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அவரது சிகாகோ உரைகள் சிறப்பித்துக் காட்டின.
- ஆன்மீக வளர்ச்சி மற்றும் மனிதகுலத்திற்கான சேவை ஆகிய இலட்சியங்களின் அடிப்படையில் 1897 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மடத்தை அவர் நிறுவினார்.
- ஜனவரி 12 ஆம் தேதியன்று அமைந்த அவரது பிறந்த நாள், இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- அவர் தனது 39 ஆவது வயதில் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலமானார்.
Post Views:
16