திட்டமிட்ட குற்றங்கள் மீது இந்தியா, ஐக்கியப் பேரரசு மற்றும் அயர்லாந்து – புரிந்துணர்வு ஒப்பந்தம்
April 6 , 2018 2688 days 882 0
மத்திய அமைச்சரவை திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான, ஒத்துழைப்பு விவகாரத்தில் இந்தியா, ஐக்கிய பேரரசு மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.
அபாயகரமான திட்டமிட்ட குற்றங்களை சமாளிக்கவும், சர்வதேச குற்றத்தன்மையைக் கட்டுப்படுத்தவும் தகவல்களை பரிமாறவும் இத்திட்டம் உதவும்.
இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் ஏற்கெனவே குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் வழக்கு தொடுத்தல், குற்றங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் நடவடிக்கைகளை பறிமுதல் செய்தல், அடையாளம் காணுதல் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக 1995ல் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டுள்ளது.