TNPSC Thervupettagam

திட்டம் 2031 – கேரளா

November 1 , 2025 2 days 30 0
  • கேரள முதல்வர் திட்டம் 2031 ஆவணத்தை வெளியிட்டார்.
  • 50 பில்லியன் டாலர் பொருளாதார உற்பத்தியை அடைவதையும் 500,000 உயர் மதிப்பு மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நான்கு உத்தி சார் திட்டங்கள் தொடங்கப்பட்டன:
    • கேரள செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (K-AIM)
    • கேரள குறைக்கடத்தி உற்பத்தி திட்டம்
    • கேரள எதிர்கால தொழில்நுட்பத் திட்டம் (KFTM)
    • தி ஃபியூச்சர் கார்ப்பரேஷன் (TFC).
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 1,000,000 குடிமக்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சி அளிக்கவும், கேரள AI உரிமைகள் மசோதாவை அறிமுகப்படுத்தவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • இயங்குபடம், ஒலி ஒளி, விளையாட்டு மற்றும் கேளிக்கைச் சித்திரம் (AVGC) துறையில் 250 நிறுவனங்களை நிறுவவும், அனைத்து அரசு சேவைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறையில் வழங்குவதையும் கேரளா நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்