இது புது தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அமைப்பான திட்டம் 39A எனும் அமைப்பினால் வெளியிடப்படும் ஒரு அறிக்கை ஆகும்.
இந்த ஆய்வானது மத்தியப் பிரதேசம், தில்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசத்தினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மரண தண்டனைகள் இங்கு அதிகமாக வழங்கப்படுவதன் காரணமாக இந்த மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
தில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் சமூகத்தின் கூட்டு உளச்சான்றின் அடிப்படையில் மரண தண்டனையை வழங்குகின்றன.
“சமூகத்தின் கூட்டு உளச்சான்று” என்ற கருத்தின் அடிப்படையில் மரண தண்டனை வழங்குவது நியாயம் என்ற வாதம் 1983 ஆம் ஆண்டு மச்சி சிங் (எதிர்) பஞ்சாப் அரசு என்ற வழக்கின் தீர்ப்பில் இந்திய உச்ச நிதிமன்றத்தினால் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
சமீபத்தில் கூட்டு உளச்சான்றானது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திய வழக்கான முகேஷ் எதிர் தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி அரசு என்ற தில்லி கூட்டுப் பாலியல் வழக்கில் 2017 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டது.
இந்த ஆய்வானது பச்சன் சிங் எதிர் பஞ்சாப் அரசு என்ற வழக்கின் 1980 ஆம் ஆண்டுத் தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட தண்டனைச் செயல்முறையை விசாரணை நீதிமன்றங்கள் கடைபிடிப்பதில்லை என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒரு அரசியலமைப்பு அமர்விடம் மரண தண்டனையின் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மை குறித்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.
2015 ஆம் ஆண்டில் ஏ.பி.ஷா அவர்களின் தலைமையிலான சட்ட ஆணையமானது மரண தண்டனையை ஒழிக்கப் பரிந்துரைத்தது.
எனினும், சட்ட ஆணையம் இந்தப் பரிந்துரையை தீவிரவாதச் செயல்கள் தொடர்பற்ற வழக்குகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளது.