"உலகின் கூரை" என்று அழைக்கப்படும் திபெத்திய பீடபூமி உருவாவதற்கு இந்தியக் கண்டத் தட்டு எவ்வாறு உதவியது என்பதை 'நேச்சர் ஜியோசயின்ஸ்' இதழில் வெளியிடப் பட்ட ஒரு ஆய்வு விளக்குகிறது.
45 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு திபெத்தில் ஆசிய கண்டத்தட்டின் கீழ் இந்திய கண்டத்தட்டு நகர்ந்தது, ஆனால் அந்த காலகட்டத்தில் அது இன்னும் மத்திய திபெத்தை அடையவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு பீடபூமியின் புவியியல் வரலாறு மற்றும் உயர்வை மறுகட்டமைக்க குறைந்த-வெப்பநிலை வெப்பக்கால அளவியல் மற்றும் புவிக்கால அளவியலைப் பயன்படுத்தியது.
திபெத்திய பீடபூமி உலகின் மிக உயர்ந்த மற்றும் மிகப்பெரிய பீடபூமியாகும், இதன் சராசரி உயரம் 4,500 மீட்டருக்கும் அதிகமாகும்.
இது உலகளாவிய பருவநிலையின் முக்கிய உந்துசக்தியாகச் செயல்படுகிறது மற்றும் பில்லியன் கணக்கான மக்களுக்கு தண்ணீரை வழங்கும் ஆசியாவின் பத்து பெரிய நதிகளின் பிறப்பிடமாக உள்ளது.