TNPSC Thervupettagam

திரிநேத்ரா திட்டம்

October 23 , 2025 13 days 38 0
  • மகாராஷ்டிராவில் உள்ள அகோலா காவல்துறை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் நிகழும் குற்றங்களைத் தடுக்க திரிநேத்ரா திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • திரிநேத்ரா என்பது அடுத்தக் குற்ற மதிப்பீடு மற்றும் தந்திரோபாய வள ஒதுக்கீட்டிற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆபத்து தொடர்பான தகவல்களைக் குறிக்கிறது.
  • தண்டனை வகை, குற்ற முறைகள் மற்றும் இருப்பிடத் தரவுகளின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் குற்றமிழைக்கும் குற்றவாளிகளின் ஆபத்து மதிப்பெண்களை ஒதுக்க இந்த அமைப்பு இயந்திரக் கற்றலைப் பயன்படுத்துகிறது.
  • ஒரு நிகழ்நேர முகப்புப் பக்கமானது காவல் நிலையம், பிரிவு மற்றும் பிராந்திய மட்டங்களில் கவனம் செலுத்தும் ரோந்துப் பணிகளுக்கு ஆபத்து குறித்த காட்சிப் படுத்தலை வழங்குகிறது.
  • இந்தத் திட்டத்தில் சாதி, மதம் அல்லது புவியியல் அடிப்படையில் விவரக் குறிப்பைத் தவிர்க்கும் நெறிமுறைப் பாதுகாப்புகள் உள்ளன.
  • மனிதத் தீர்ப்பினை மையமாகக் கொண்டு, AI கணிப்புகள் வழிகாட்டுதலாக உள்ளன, ஆனால் அவை காவல்துறை முடிவுகளை மாற்றுவதில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்