திரிபுரா - முழு கல்வியறிவு நிலை
- ULLAS - நவ பாரத் சாக்சார்த்த காரியக்ரம் திட்டத்தின் கீழ் திரிபுரா முழு கல்வியறிவு நிலையைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மிசோரம் மற்றும் கோவாவிற்குப் பிறகு ஒரு முழு கல்வியறிவு நிலையை எட்டிய இந்தியாவின் மூன்றாவது மாநிலம் இதுவாகும்.
- 1961 ஆம் ஆண்டில் வெறும் 20.24% ஆக இருந்த மாநிலத்தின் கல்வியறிவு விகிதமானது, தற்போது 95.6% ஆக உயர்ந்துள்ளது.
- ULLAS என்பது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.
- இந்த முக்கியத் திட்டமானது, கல்வியறிவு இல்லாத இளையோர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் (15+ வயது) ஆகியோரை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இது அடிப்படைக் கல்வியறிவு, எண்ணறிவு மற்றும் மிகவும் முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் கவனம் செலுத்துகிறது.

Post Views:
41