TNPSC Thervupettagam

திரிபுர சுந்தரி கோயில் புதுப்பிப்பு

September 28 , 2025 3 days 59 0
  • திரிபுராவின் உதய்பூரில் அமைந்துள்ள 524 ஆண்டுகள் பழமையான மறு மேம்பாடுகள் (மறுசீரமைப்பு) செய்யப்பட்ட திரிபுர சுந்தரி கோயிலை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • இது PRASHAD திட்டத்தின் கீழ் 54 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் மறு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மறுவடிவமைப்பிற்கு மத்திய அரசு (34.43 கோடி ரூபாய்) மற்றும் திரிபுரா மாநில அரசு (17.61 கோடி ரூபாய்) இணைந்து நிதியளித்தன.
  • இந்தக் கோயில் ஆனது 1501 ஆம் ஆண்டில் மகாராஜா தன்ய மாணிக்யாவால் கட்டப் பட்டது.
  • வங்காள ஏக்-ரத்னா (ஒற்றை முகடு உடைய) கட்டிடக்கலையில் அமைந்த இந்தக் கோவிலில் திரிபுர சுந்தரி மற்றும் சண்டி தேவியின் கருங்கல் சிலைகள் அமைந்து உள்ளன.
  • இந்தக் கோயிலின் புகழ்பெற்ற பிரசாதமான மாதாபரி பேடா சமீபத்தில் மதிப்புமிக்கப் புவிசார் குறியீட்டினை (GI) பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்