திருச்சி மண்டலத்தில் காணப்படும் ஈரநிலப் பறவை இனங்கள்
March 21 , 2025 207 days 262 0
ஒருங்கிணைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பின் போது பல்வேறு ஈரநிலப் பறவை இனங்கள் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது திருச்சி மாவட்டத்தில் கூத்தைப்பர், கிளியூர், கிருஷ்ண சமுத்திரம், முக்கொம்பு, திருவெறும்பூர், துறையூர், ஆலத்துடையான்பட்டி, துவரங் குறிச்சி மற்றும் மணப்பாறை உள்ளிட்ட 20 சதுப்பு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டது.
வலசை போகும் பறவைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கணக்கெடுப்பு ஆனது, ஏரிகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் பறவைகளின் வாழ்விடங்களை மதிப்பிடுகிறது.
ஈரநிலப் பறவைகளின் பயனுள்ள மேலாண்மை மற்றும் வளங்காப்பினை உறுதி செய்ய இது உதவும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிநாடு குளம், ஆரியூர் குளம், அன்னவாசல் பெரிய குளம், சிறுங்காகுளம் உள்ளிட்ட 25 சதுப்பு நிலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.