திருத்தப்பட்ட நிலநடுக்கப் பாதிப்புக் குறியீடு 2025
December 2 , 2025 3 days 60 0
இந்தியத் தரநிலைகள் வாரியத்தால் தயாரிக்கப் பட்ட 2025 ஆம் ஆண்டு நில நடுக்கப் பாதிப்புக் குறியீட்டின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நில அதிர்வு மண்டல வரைபடத்தை இந்தியா வெளியிட்டது.
ஜம்மு காஷ்மீர்-லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான முழு இமயமலை வளைவும் தற்போது VIவது புதிய அதிக ஆபத்து மண்டலத்தில் வைக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் சுமார் 61% பகுதி தற்போது மிதமான மற்றும் அதிக நிலநடுக்க அபாயம் உள்ள மண்டலங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு மண்டலங்களுக்கு இடையில் அமைந்திருந்தால் எல்லை/இடைப்பட்ட நகரங்கள் தானாகவே அதிக ஆபத்து மண்டலத்தில் வைக்கப்படும்.
இந்த வரைபடமானது புதுப்பிக்கப்பட்ட மண் மற்றும் தரை-பதில் வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நிகழ்தகவு சார் நில அதிர்வு அபாய மதிப்பீட்டை (PSHA) பயன்படுத்துகிறது.