இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் 49Bவது விதியின் கீழ் EVM வாக்குச்சீட்டுகளுக்கான வழிகாட்டுதல்களை திருத்தி உள்ளது.
தற்போது அடையாளத்தை மேம்படுத்துவதற்காக, வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் ஆனது EVM வாக்குச்சீட்டுகளில் அச்சிடப் படும்.
வேட்பாளர்களின் வரிசை எண்கள் மற்றும் மேற்கூறிய எதுவும் இல்லை (NOTA) என்ற விருப்பத் தேர்வானது சர்வதேச எண்ணிம வடிவிலான இந்திய எண்களில் அச்சிடப் படும்.
இந்த வரிசை எண்கள் ஆனது சிறந்த தெளிவுக்காக ஓர் குறிப்பிட்ட அளவுடன் கூடிய தடிமனான எழுத்துருவைப் பயன்படுத்தும்.
வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் NOTA ஆகியவை எளிதாகப் படிக்கக்கூடிய வகையில் சீரான எழுத்துரு வகை மற்றும் அளவில் அச்சிடப் படும்.
வரையறுக்கப்பட்ட RGB மதிப்புகளின் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு குறிப்பிட்ட இளஞ்சிவப்பு நிறத்தில் EVM வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும்.