TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட MGNREGA ஊதியங்கள்

April 5 , 2022 1222 days 547 0
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இது 2022-23 ஆம் நிதியாண்டுக்கான ஊதிய விகிதம் ஆகும்.
  • 34 ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுள், 21 ஒன்றியப் பிரதேசங்கள் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய விகித உயர்வைப் பெற்றுள்ளன.
  • 10 மாநிலங்களில்  5 சதவீதம் ஊதிய விகிதமானது உயர்த்தப்பட்டுள்ளது.
  • மிசோரம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு எவ்வித உயர்வுகளும் வழங்கப் படவில்லை.
  • ஊதிய விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றமானது ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் கோவா மாநிலத்தில் ஊதிய விகித உயர்வானது 7.14 சதவீதம் அதிகரித்து ஒரு நாளைக்கு ரூ.315 ஆக உயர்ந்துள்ளது.
  • மேகாலயா மாநிலத்தில் ஊதிய விகிதமானது, 1.77 சதவீதம் அதிகரித்து ஒரு நாளைக்கு ரூ.230 என்ற அளவில் மிகக் குறைந்த உயர்வையே கண்டுள்ளது.
  • தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் என்ற அளவிலான உயர்வினைக் கண்டுள்ளன.
  • ஒரு நாளைக்கு ரூ. 331 என்ற விகிதத்தில் அதிக ஊதிய விகிதத்தை பெறும் ஹரியானா மாநிலத்தைத் தொடர்ந்து, கோவா ரூ. 315 என்ற விகிதத்திலும், அதைத் தொடர்ந்த இடத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய ஐந்து ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் உள்ளன.
  • குறைந்த ஊதிய விகிதம் கொண்ட 5 ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் என்ற பிரிவில் திரிபுரா (ரூ.212), பீகார் (ரூ 210) ஆகியவையும் அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்