திருத்தியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் திட்டம் (EMC 2.0)
March 28 , 2020 1948 days 608 0
இந்தத் திட்டமானது மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் திட்டத்தின் மூலம் பொது வசதிகள் மற்றும் சேவைகளுடன் சேர்த்து ஒரு உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வளர்ச்சியை வழங்க இருக்கின்றது.
இந்தத் திட்டமானது EMCகள் (Electronics Manufacturing Clusters - EMC) மற்றும் பொதுச் சேவை மையங்கள் ஆகிய இரண்டையும் அமைப்பதற்கு உதவ இருக்கின்றது.
EMCகளானது ESDM (Electronics System Development and Maintenance – மின்னணு அமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு) அலகுகளுக்காக அடிப்படைக் கட்டமைப்பு, சேவைகள் மற்றும் இதரப் பொது வசதிகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் புவுயியல் ரீதியில் தொடர்ச்சியாக இருக்கும் நிலப்பரப்புப் பகுதிகளில் அமைக்கப்பட இருக்கின்றது.
குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான ESDM அலகுகள் உள்ளன. EMCகள், தொழிற்சாலைப் பகுதிகள்/பூங்காக்கள், தொழிற்சாலைப் பெருவழிப் பாதைகளில் அமைந்துள்ள அந்த சில ESDM அலகுகளுக்காக பொதுத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றின் மீது பொதுச் சேவை மையங்கள் கவனம் செலுத்த இருக்கின்றன.