TNPSC Thervupettagam

திருநர்கள் சுகாதாரம்

November 18 , 2025 10 days 97 0
  • இந்தியாவில் திருநர்கள் நலக் கொள்கையை அறிமுகப்படுத்திய மற்றும் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று திருநர்கள் நல வாரியத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • இந்த வாரியத்திற்கு சமூக நலத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார்.
  • ஏப்ரல் 15 ஆம் தேதியானது தற்போது மாநிலத்தில் திருர்கள் நல தினமாகக் கொண்டாடப் படுகிறது.
  • சென்னையில் உள்ள இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருநர்கள் நல வாரியத்தின் ஆதரவுடன் 2008 ஆம் ஆண்டு பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகளை வழங்கத் தொடங்கியது.
  • இந்த முன்னெடுப்பானது, ஒரு மாநிலத்திற்கு குறைந்தது ஒரு அரசு மருத்துவமனையாவது அத்தகைய சேவைகளை வழங்க வலியுறுத்திய 2019 ஆம் ஆண்டு திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப் பட்டது.
  • 2018 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கான தேசிய சுகாதார இயக்கம், ஒரே தளத்தின் கீழ் பலதரப்பட்ட பராமரிப்புச் சேவை வழங்க பாலின வழிகாட்டுதல் மருத்துவ மனைகளை (GGCs) நிறுவியது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள், எட்டு மாவட்டங்கள் GGC வசதிகளைக் கொண்டிருக்கும் என்ற நிலையில் அவை இலவசப் பாலின உறுதிப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் விரிவான திருநர் சுகாதாரப் பராமரிப்பை வழங்கும்.
  • 2022 ஆம் ஆண்டில், பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவை முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் (CMCHIS-PMJAY) ஒருங்கிணைக்கப்பட்டன.
  • மருத்துவமனை நிதி ஒதுக்கீடுகள் மூலம் முன்னர் நிதியளிக்கப்பட்ட சேவைகள் தற்போது ஒருங்கிணைந்த இந்தியக் காப்பீட்டு நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு கொள்கையின் கீழ் (2022–2027) உள்ளடக்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டில் திருநர் பராமரிப்பை உள்ளடக்கிய முதல் தெற்காசிய நாடாக இந்தியா திகழ்கிறது.
  • அணுகலை மேம்படுத்துவதற்காக, CMCHIS-PMJAY திட்டத்தின் கீழ் சேர்க்கைக்கான 72,000 ரூபாய் மதிப்பிலான வருடாந்திர வருமான வரம்பை மாநில அரசு நீக்கியது.
  • திருநரின் பெயரைக் கொண்ட குடும்ப அட்டைக்கான தேவையையும் மாநில அரசு தள்ளுபடி செய்தது.
  • சுகாதாரப் பராமரிப்புக்கான தடைகள் தவறான கருத்து, பாகுபாடு மற்றும் குடும்ப நிராகரிப்பு ஆகியவை உட்பட, வருமானத்திற்கு அப்பாற்பட்டதாக இருப்பதை இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்