திருவள்ளூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடல் சோதனை
May 2 , 2025 19 days 80 0
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்காச்சோள விவசாயிகள் இந்த ஆண்டு சோதனை அடிப்படையில் 50 ஏக்கருக்கு மேலான பரப்பில் மக்காச் சோளப் பயிரை அறுவடை செய்துள்ளனர்.
R.K. பேட்டை, திருத்தணி, திருவலங்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு தொகுதிகளைச் சேர்ந்த சுமார் ஐம்பது விவசாயிகள் இந்தப் பகுதியில் புதியப் பயிரை வளர்ப்பதற்கான பரிசோதனையில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து விவசாயிகளுக்கு MH6 என்ற வகை விதைகள் வழங்கப்பட்டன.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள எத்தனால் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.
இந்திய அரசானது, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து உள்ளதால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.