TNPSC Thervupettagam

திருஷ்டி செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தோல்வி

July 14 , 2026 14 days 99 0
  • உலகின் முதல் OptoSAR (ஒளியியல் + செயற்கை துளை ரேடார்) செயற்கைக்கோளான திருஷ்டி (Drishti) திட்டமானது, புவி காந்த சூரியப் புயலால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தகவல் தொடர்பை இழந்தது.
  • ஏவுதல் மற்றும் ஆரம்பச் சுற்றுப்பாதைக் கட்டத்தின் போது சூரியப் புயலின் கதிர்வீச்சு ஒரு முக்கிய செயற்கைக்கோள் அமைப்பைப் பாதித்துள்ளது.
  • ஒரே இடத்தின் ஒளியியல் பல-நிறமாலை மற்றும் செயற்கை துளை ரேடார் (SAR) படங்களை ஒரே நேரத்தில் எடுக்கும் வகையில் இந்தச் செயற்கைக்கோள் என்பது வடிவமைக்கப் பட்டது.
  • மேகமூட்டங்கள் மற்றும் இரவு நேரங்களிலும் செயல்படக்கூடிய SAR சென்சார்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்ப மண்டல மேகமூட்டப் பிரச்சினையைச் சமாளிப்பதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • எளிதான புரிதலுக்காக SAR தரவுகளிலிருந்து ஒளியியல் சார்ந்த படங்களை உருவாக்க திருஷ்டி செயற்கைக்கோள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தியது.
  • எல்லை கண்காணிப்பு, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் காப்பீட்டு மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக இந்தச் செயற்கைக்கோள் திட்டமிடப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்