TNPSC Thervupettagam

திறன் மிகு கொசு கண்காணிப்பு அமைப்பு

July 11 , 2025 2 days 27 0
  • மழைக்காலத்தில் கொசுப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக என்று ஆந்திரப் பிரதேச மாநில அரசானது திறன் மிகுந்த கொசு கண்காணிப்பு அமைப்பு (SMoSS) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த திட்டமானது விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, இராஜமஹேந்திர வரம், நெல்லூர் மற்றும் கர்னூல் ஆகிய ஆறு நகரங்களில் 66 இடங்களில் செயல்பட உள்ளது.
  • இந்த அமைப்பானது கொசு வகைகள், எண்ணிக்கைகள் மற்றும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற வானிலைச் சூழல்களை நன்கு கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI), இணைய உலக அமைப்பின் (IoT) உணர்வுக் கருவிகள் மற்றும் சில ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகிறது.
  • ஆளில்லா விமானங்கள் ஆனது குறைந்த நேரத்தில் குறைந்த இரசாயனங்கள் மற்றும் குறைந்த செலவில் கொசுக்களைக் கொல்லும் இரசாயனங்களை மிகவும் வேகமாக தெளிக்கும்.
  • ஒரு நேரடி முகப்புப் பக்கமானது, விரைவான மற்றும் தெளிவான கண்காணிப்புக்காக ஒரு மைய அமைப்புக்கு நிகழ்நேர தரவைக் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்