திறன் மேம்பாட்டிற்கான சங்கத்தின் சிறந்த விருது 2021
September 5 , 2021 1430 days 665 0
இந்திய மின்சாரக் கட்டமைப்பு கழக நிறுவனத்திற்கு (POWERGRID – Power Grid Corporation of India Limited) 2021 ஆம் ஆண்டின் திறன் மேம்பாட்டிற்கான சங்கத்தின் சிறந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
POWERGRID நிறுவனமானது இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் கீழான மகா ரத்தின வகையைச் சேர்ந்த மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
உலகம் முழுவதிலுமான 71 அமைப்புகளில் POWERGRID நிறுவனம் 8வது இடத்தினைப் பெற்றுள்ளது.
இந்த விருதினை வெல்லும் ஒரே பொதுத்துறை நிறுவனமும் முதல் 20 இடங்களில் இடம் பெற்ற இரு இந்திய நிறுவனங்களுள் ஒன்றாகவும் POWERGRID மாறியுள்ளது.