திறம் வாய்ந்த வான்வளிக்கள எதிர்ப்பு ஆயுதம் (SAAW) - வெற்றிகர சோதனை
August 20 , 2018 2470 days 878 0
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மித எடை கொண்ட மென்சரிவு (Glide) குண்டான திறம் வாய்ந்த வான்வளிக்கள எதிர்ப்பு ஆயுதத்தை (SAAW- Smart Anti Airfield Weapon) இந்திய விமானப் படை விமானத்திலிருந்து தூக்கி எறிந்து DRDO ஆனது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
SAAW திட்டமானது இந்தியாவின் முதலாவது உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்படும் வான்வெளிக்கள எதிர்ப்பு ஆயுதத் திட்டமாகும். இத்திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசாங்கம் செப்டம்பர் 2013-ல் வழங்கியது.
இந்திய விமானப் படை (IAF - Indian Air Force) மற்றும் இம்ராத் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மத்திய நிறுவனமான பாதுகாப்பு ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO - Defence Research and Development Organisation) இதை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.
SAAW என்பது நீண்ட தூரத்திற்கு மிதமான எடை கொண்ட உயர் துல்லியத் தன்மையுடைய வழிகாட்டும் வான்வளிக்கள எதிர்ப்பு ஆயுதமாகும்.