தில்லியின் தலைமை நிர்வாக அதிகாரத்தின் தலைமை துணை நிலை ஆளுநரே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
November 3 , 2017 2740 days 923 0
இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைநகரத்திற்கான நிர்வாக விஷயங்களில் இந்திய அரசியலமைப்பானது தில்லியின் துணை நிலை ஆளுநருக்கே முன்னுரிமை அளிப்பதாகத் தெளிவாக கூறியுள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு விதி 239AA ஆனது நிலம், சட்டம் மற்றும் ஒழுங்கு, காவல் ஆகிய விஷயங்கள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்றும், இவை துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டுமென்றும், இதர விஷயங்கள் நகர நிர்வாகத்திடம் விட்டுவிட வேண்டுமென்றும் கூறுகிறது.