திவால்நிலை மற்றும் நொடித்தல் சட்டத் திருத்த மசோதா 2026
April 5 , 2026 15 hrs 0 min 42 0
இந்திய நாடாளுமன்றம், திவால்நிலை மற்றும் நொடித்தல்சட்ட (திருத்த) மசோதா, 2026-ஐ நிறைவேற்றியுள்ளது.
தாமதங்களைக் குறைக்கவும், தீர்வு செயல்முறைகளை மேம்படுத்தவும் 2016-ஆம் ஆண்டின் திவால்நிலை மற்றும் திவாலாகுதல் சட்டத்தில் இந்த மசோதா திருத்தங்களை மேற்கொள்கிறது.
நலிவடைந்த நிறுவனங்களை மீட்டெடுக்கவும், வணிக மதிப்பைத் தக்க வைக்கவும், திவால் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு முக்கிய மாற்றமாக, சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளைத் விசாரிக்கும் காலமானது திவால் மனு தாக்கல் செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, கடன் வழங்குநர்களின் குழுவானது தீர்வு விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.