தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரியைக் கண்டறிதல் (Bug Snifer)
May 6 , 2020 2011 days 902 0
புனேவில் உள்ள அகார்கர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விரைவாக பாக்டீரயாவைக் கண்டறிவதற்காக திறன்மிக்க மற்றும் விலை குறைந்த உணர்வியான “Bug Snifer” என்ற கருவியை வடிவமைத்துள்ளது.
இது 30 நிமிடத்திற்குள் 1 மில்லி லிட்டரில் 10 செல்களைக் கண்டறியும் வரம்புடன் நுண்ணுயிரிகளைக் கண்டறியும் திறன் கொண்டது.
நோய் ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியாக்கள் எஸ்செரிச்சியா கோலி மற்றும் சாலமோனெல்லா தைபீமூரியம் ஆகியவையாகும்.
Bug Snifer என்பது பாக்டீரியாவின் இருப்பைக் கண்டறிவதற்காக செயற்கை பெப்டைடுகள், காந்தத் தன்மை கொண்ட நானோ துகள்கள், குவாண்டம் புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஒரு உயிரி உணர்வியாகும்.
ARI (Agharkar Research Institute) என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு தனிச் சுதந்திர அமைப்பாகும்.