தீயணைப்புச் சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கான திட்டம்
July 10 , 2023 748 days 367 0
மத்திய உள்துறை அமைச்சகமானது, “மாநிலங்களில் தீயணைப்புச் சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கானத் திட்டத்தினை” தொடங்கியுள்ளது.
இது நாடு முழுவதும் தீ பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பேரிடர் அபாயக் குறைப்பு முறையினை வலுப்படுத்துவதன் மூலம் பேரழிவுகளின் போது ‘உயிரிழப்பு இல்லாமலும் குறைந்தபட்ச அளவிலான சொத்து இழப்பும் ஏற்படும் வகையிலான பாதுகாப்பினையும் இது உறுதி செய்கிறது.