தீவிரப்படுத்தபட்ட இந்திர தனுஷ் தடுப்பூசித் திட்டம்
October 9 , 2017 2764 days 1562 0
குஜராத்திலுள்ள வட்நகரில் தீவிரப்படுத்தபட்ட இந்திர தனுஷ் தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் வழக்கமான நோய்த்தடுப்பூசி திட்டங்களின் கீழ் உள்ளடங்காமல் போன கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரண்டு வயதிற்கு கீழுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நோய்த்தடுப்புத் திறனூட்டல் (immunisation) மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் மூலம் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 90 % மக்களுக்கு முழு நோய்த்தடுப்புத் திறனூட்டலை 2020 க்கு முன்னரே மேற்கொள்ள வேண்டும் என்ற கால வரம்புடைய இலக்கை முன்னரே அடைய வைப்பது ( 2018-டிசம்பருக்குள் ) இத்திட்டத்தின் நோக்கம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குடிபெயரும் மக்கள் தொகையுடைய நகர்ப்புற குடிசைப் பகுதிகள், நகர்ப்புற பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் குறைந்த செயல்திறனுடைய பகுதிகளில் தீவிரப்படுத்தபட்ட இந்திர தனுஷ் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படும்.
தேசிய சுகாதார கணக்கெடுப்புகள், சுகாதார மேலாண்மை தகவல் தரவு அமைப்பு, உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு தரவுகள் போன்ற மூன்று தரவுகளின் அடிப்படையில் இத்திட்டத்திற்கான பகுதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் (National Urban Health Mission) குறிப்பிடப்பட்டுள்ள நகரங்கள் மற்றும் நகர குடியேற்றப் பகுதிகளிலும் தீவிரப்படுத்தபட்ட இந்திரா தனுஷ் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.
PRAGATI (Proactive Governance and Timely Implementation) எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் திட்டம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் கண்காணிக்கப்படும்