தீவிரப்படுத்தப்பட்ட போலியோ நோய் எதிர்ப்புத் திறனூட்டல் பிரச்சாரம் - தமிழ்நாடு
January 10 , 2020 2105 days 1013 0
ஜனவரி 19 ஆம் தேதியன்று தீவிரப்படுத்தப்பட்ட போலியோ நோய்எதிர்ப்புத் திறனூட்டல் பிரச்சாரத்தின் ஒரே சுற்றில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து வழங்க தமிழகப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஆண்டு, போலியோ நோய் இல்லாத 16வது ஆண்டில் தமிழகம் நுழைந்துள்ளது.
மாநிலத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் போலியோ தடுப்பு மருந்து மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.