மத்திய சுகாதார அமைச்சகமானது டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நாடு தழுவிய அளவிலான ஒரு நோய்த் தடுப்பு இயக்கமான இந்திர தனுஷ் 2.0 என்பதனைத் தொடங்கவுள்ளது.
இந்தத் திட்டமானது 271 மாவட்டங்களில் இருக்கும் 70 சதவிகிதத்திற்கும் குறைவான நோய்த் தடுப்பு ஆற்றல் கொண்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது 16 மாவட்டங்களில் மட்டுமே 90% அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான நோய்த் தடுப்பு மருந்துச் சேவையைக் கொண்டு இருக்கின்றது.
இது 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் குறைந்தது 90% நோய்த் தடுப்பு ஆற்றலை (தடுப்பூசி) வழங்கத் திட்டமிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில், நோய்த் தடுப்பு மருந்து அளிக்கப்படாத அல்லது பகுதி நோய்த் தடுப்பு மருந்துகளைப் பெற்ற குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகளை அளிக்க அரசாங்கமானது தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் என்ற திட்டத்தைத் தொடங்கியது.
ஒரு வருடத்திற்குள், தடுப்பூசியின் மூலம் தடுக்கக் கூடிய 12 நோய்களுக்கு எதிராக சுமார் 5 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப் பட்டுள்ளன.
இந்த ஆண்டு (2019) தனது வெற்றிகரமான போலியோ சொட்டு மருந்து திட்டத்தின் 25வது ஆண்டினை இந்தியா நினைவு கூர்கின்றது.