தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் – ஆகஸ்ட் 21
August 22 , 2019 2187 days 486 0
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 அன்று தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் அனுசரிக்கப் படுகின்றது.
தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவும் உலகம் முழுவதும் தீவிரவாதத்தினால் நிகழும் விளைவுகளைக் கண்டிப்பதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை கௌரவிப்பதற்காக ஆகஸ்ட் 21 ஆம் தேதியை இது போன்ற ஒரு தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.