தீவிரவாதத்தின் நிலை குறித்த அறிக்கைகள் 2021 - இந்தியா
March 5 , 2023 900 days 381 0
அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப் பணியகமானது 'தீவிரவாதத்தின் நிலை குறித்த அறிக்கைகள் 2021 - இந்தியா' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்காகவும், அதற்குக் கிடைக்கப் பெறும் சேவைகளைத் தடை செய்வதற்காகவும், வீழ்ச்சியுறச் செய்திடச் செய்வதற்காகவும் இந்திய அரசு குறிப்பிடத் தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளை தீவிரவாதம் வெகுவாகப் பாதித்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ISIS, அல்-கொய்தா, ஜமாத்-உல்-முஜாஹிதீன், ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்காளதேசம் ஆகியவை தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்ற தீவிரவாத அமைப்புகள் ஆகும்.
2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 153 தீவிரவாதத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் 45 பாதுகாப்புப் படையினர், 36 பொதுமக்கள், 193 தீவிரவாதிகள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர்.
தேசியப் புலனாய்வு முகமையானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, ISIS தொடர்பான 37 வழக்குகளை விசாரித்து 168 பேரைக் கைது செய்துள்ளது.