தீவிரவாத நிதியுதவி அபாயங்கள் குறித்த FATF அமைப்பின் புதிய மேம்பாடு
July 13 , 2025 71 days 144 0
தீவிரவாத நிதியளிப்பு அபாயங்கள் குறித்த மிகவும் விரிவான புதிய மேம்பாடு என்ற தலைப்பில் அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு ஆனது முதன்முறையாக அதன் அறிக்கையில் அரசின் நிதி ஆதரவு பெறும் தீவிரவாதம் குறித்த ஒரு தனிப் பகுதியைச் சேர்த்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளானது, இணைய வழி வணிகத் தளங்கள் மற்றும் இயங்கலை வழியில் பண வழங்கீட்டுச் சேவைகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து இது கவலைகளை எழுப்பியது.
பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியளிப்பு குறித்த இந்தியாவின் 2022 ஆம் ஆண்டு தேசிய இடர் மதிப்பீடு (NRA) ஆனது அரசின் நிதி ஆதரவு பெறும் தீவிரவாதத்தினை ஒரு முக்கிய கவலையாகக் குறிப்பிட்டது.