நாடு தழுவிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாமின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 43,051 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்தது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவதற்காகப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் நடமாடும் தடுப்பூசிச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளையும் இம்முகாம் உள்ளடக்கியுள்ளது.
இம்முகாமிற்காக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.