TNPSC Thervupettagam

தீவுகள் பாதுகாப்பு மண்டல விதிகள் 2025

July 16 , 2025 15 hrs 0 min 36 0
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளுக்கான தீவுகள் பாதுகாப்பு மண்டல (IPZ) விதிகளை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
  • IPZ அறிவிப்பின் (2011) கீழான அனுமதியின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இது 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிப்பு உடன் ஒத்துப் போகிறது.
  • இந்தப் புதிய விதிகளானது, புதிய ஒப்புதல்களின் தேவையில்லாமல் இதர பல சட்ட நிறுவனங்களுக்கிடையில் அனுமதிகளை மாற்றவும் அவற்றைப் பிரித்து அளிக்கவும் அனுமதிக்கின்றன.
  • தீவுகள் பாதுகாப்பு மண்டலம் ஆனது கடலோரப் பகுதிகளை சுற்றுச்சூழல் உணர் திறன் அடிப்படையில், தொழில்துறை உருவாக்கத்திற்கான மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நான்கு தீவு கடலோரப் பிராந்திய மண்டலங்களாக (ICRZ-I முதல் ICRZ-III மற்றும் நீர்நிலைப் பகுதிகள்) வகைப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்