TNPSC Thervupettagam

துக்காச்சி கோவில் - யுனெஸ்கோ அங்கீகாரம்

July 17 , 2026 11 days 170 0
  • தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், துக்காச்சியில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபத்சகாயேஸ்வரர் கோயிலானது, பாரம்பரியப் பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் சிறப்பு விருதைப் (2024) பெற்றுள்ளது.
  • இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழனுடன் தொடர்பு உடைய பிற்கால சோழர் கால நினைவுச் சின்னமாகும் என்பதுடன் மேலும் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு வாழும் கோயிலாகும்.
  • இது கோயிலின் கருவறை ஒரு ஊர்வலத் தேர் போல வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு அரிய கரகக் கோவில் கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது.
  • இந்த மறுசீரமைப்புப் பணியில் ஆளில்லா விமான ஆய்வுகள், டிஜிட்டல் வரைபடம் மற்றும் அனஸ்டிலோசிஸ் நுட்பங்களைப் பயன்படுத்தி கிரானைட் கற்கள் கவனமாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் அசல் நிலைகளிலேயே மீண்டும் கட்டப்பட்டன.
  • இந்த ₹5 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் திட்டமானது பாரம்பரிய ஸ்தபத்ய வேதம் மற்றும் ஆகம சாஸ்திரக் கொள்கைகளை நவீன பொறியியல் முறைகளுடன் ஒருங்கிணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்